This Article is From Aug 02, 2018

பிரியாணி கடை ஊழியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஸ்டாலின்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரபலமான பிரியாணி கடைக்குள் புகுந்த கும்பல், கடை ஊழிகர்களை தாக்கி உள்ளனர்

பிரியாணி கடை ஊழியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஸ்டாலின்

சென்னை: (பிடிஐ) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரபலமான பிரியாணி கடைக்குள் புகுந்த கும்பல், கடை ஊழிகர்களை தாக்கி உள்ளனர். உணவு பரிமாறும்படி கேட்ட கும்பலிடம், இன்று கடை அடைக்கப்பட்டுள்ளது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கடை ஊழியர்களை கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி வெளியானதால், பரப்பரப்பு ஏற்பட்டது.

காவல் துறை விசாரணையில், திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனை தொடந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், திமுகவைச் சேர்ந்த 19 முதல் 23 வயதுடைய 6 பேரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

இன்று, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தாக்குதல் நடத்தப்பட்ட பிரியாணி கடைக்கு சென்று ஊழியர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இது போன்ற தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக செயல் தலைவர், திமுக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அதனை அடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட திமுக கட்சியை சேர்ந்த யுவராஜ். திவாகர் என்ற நபர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.