This Article is From May 28, 2020

புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

இது மத்திய அரசின் பொறுப்பற்ற முடிவு மட்டுமில்லாமல் – திறம்பட கையாள வேண்டிய கொரோனா பேரிடரிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதுமாகும். 

Advertisement
தமிழ்நாடு Edited by

புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!


புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும். மின்சாரத்தை தனியார்மயமாக்க மாநில அரசு நிறுவனங்களை மத்திய அரசு மயமாக்குவது ஏற்க முடியாததாகும் என்று ஸ்டாலின் கூறினார். திமுகவின் முயற்சிக்கு துணை நிற்கக்கோரி கேரளா, ஆந்திரா உட்பட 12 மாநில முதல்வர்களுக்கும் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார்.

2020ம் ஆண்டு மின்சார திருத்த மசோதா திட்டத்தின் மூலம் மாநில அரசாங்கங்களின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விவசாயிகளின் உரிமைகளை உணர்ந்து அதில் நற்பல திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், பாஜக மற்றும் பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் சட்டத்திருத்தத்தை எதிர்க்க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து- செயல்படுத்தினார். அத்திட்டம் 1990-லிருந்து இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம்தான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கி, உணவுப் பற்றாக்குறையை போக்கியதுடன் லட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாத்தது.

Advertisement

இத்தகைய திட்டத்தை முடக்கும்விதமாக, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் விதமாகவும் மின்சார திருத்தச் சட்டம் 2020 உள்ளது. மேலும், கொரோனா தொற்று மற்றும் அதனால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது மத்திய அரசின் பொறுப்பற்ற முடிவு மட்டுமில்லாமல் – திறம்பட கையாள வேண்டிய கொரோனா பேரிடரிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதுமாகும். 

மாநிலங்களின் மின்சார ஒழுங்குமுறை வாரியம் மீது மத்திய அரசு நேரடி கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது என்று தெரிவித்த அவர், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களின் சட்டமன்ற அதிகாரங்களுக்குள் நுழைவதற்கு அல்லது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி கொள்கைகளை மீறுவதற்கு மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான மாநில உறவின் நற்பயன்களுக்கு பொருந்தாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

மேலும் இலவச மின்சாரம் திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக இருந்து வருகிறது, பின்னர் லட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாக்கிறது, அதே நேரத்தில் உணவு பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement