This Article is From Oct 23, 2018

ரயில் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி - 14 பேர் படுகாயம்

மேற்கு வங்காளத்தின் சந்திர காசி ரயில் நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ரயில் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி - 14 பேர் படுகாயம்

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படும் காட்சி

Kolkata:

மேற்கு வங்காள மாநிலம் சந்திரகாசி ரயில் நிலையத்தில் உள்ள நடைபாலம் ஒன்றில் இன்று நெரிசல் சம்பவம் ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர்.

சந்திரகாசி ரயில் நிலையத்தில் இன்று மாலை 6.30-க்கு மொத்தம் 3 ரயில்கள் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அவற்றில் 2 ரயில்கள் மின்சாரத்தில் இயங்கும் உள்ளூ ரயில்கள். மற்றொரு ரயில் நாகர்கோயில் - ஷாலிமர் விரைவு வண்டி.

இந்த 3 ரயில்களும் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வருவது போன்ற அறிவிப்பு வெளியானதால், அதற்காக காத்திருந்தவர்கள் 2 மற்றும 3-வது பிளாட்பாரத்தில் அங்கும் இங்கும் ஓடினர். இறுதியாக நடைபாலத்தில் பயங்கர நெரிசல் ஏற்பட்டது.

இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 14 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சந்திரகாசி ரயில் நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். தெற்கில் இருந்து வரும் ரயில்களை மத்திய கொல்கத்தாவுடன் இணைக்கும் பகுதியாக இந்த ரயில் நிலையம் உள்ளது.
 

.