This Article is From Sep 28, 2019

கீழடியில் நின்றிருந்தேன், மனதோ சந்திரயானைப் போல வான்வரை பறந்து உயர்ந்தது: மு.க.ஸ்டாலின்

மத்திய அரசும், மாநில அரசும் முழு கவனத்துடன் ஆகழாய்வை மேற்கொள்ள வேண்டும், கி.மு.6.ம் நூற்றாண்டில் தமிழர் நாகரீகம் எப்படி இருந்தது என்பது கீழடி ஆய்வில் தெரிய வருகிறது

Advertisement
தமிழ்நாடு Edited by

கீழடியில் நின்றிருந்தேன், மனதோ சந்திரயானைப் போல வான்வரை பறந்து உயர்ந்து சென்றது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது தெரிய வந்துள்ளது. 

இவை தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. எனவே கீழடி அகழாய்வு இடத்தை பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனிடையே, மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடிக்கு சென்று அங்கு அகழாய்வு நடைபெற்ற இடத்தையும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, ஆய்வு பணியில் ஈடுபடும் தொல்லியல் துறைக்கு திமுக சார்பில் வாழ்த்து தெரிவித்த அவர், ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குகிறது என்றார். 

Advertisement

மேலும், மத்திய அரசும், மாநில அரசும் முழு கவனத்துடன் ஆகழாய்வை மேற்கொள்ள வேண்டும், கி.மு.6.ம் நூற்றாண்டில் தமிழர் நாகரீகம் எப்படி இருந்தது என்பது கீழடி ஆய்வில் தெரிய வருகிறது என்று தெரிவித்தார். 

இந்நிலையில் கீழடி பகுதியைச் சென்று பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அது குறித்து தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தான் கீழடியில் நின்ற போது தன் மனம் சந்திரயானைப் போல வான்வரை பறந்து உயர்ந்து சென்றது என தெரிவித்தார். 

Advertisement

மேலும், தமிழர்கள் பல பகுதிகளில் சிறந்த நாகரிகம், பண்பாட்டை கடைப்பிடித்து முன்னோடியாக விளங்கியவர்கள். தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, அதனை பாதுகாப்பதும் கடமையாகும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

கீழடியில் நான்காம் கட்ட ஆய்வினை மேற்கொண்ட தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை வெளியிட்ட அறிக்கையினை உடனடியாகப் பாராட்டியதுடன், தொல்தமிழர் பெருமையைப் பறைசாற்றும் அகழ்வாய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டிட வேண்டும் எனவும் வலியுறுத்தினேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement