Read in English
This Article is From Sep 06, 2018

377 பிரிவு ரத்தும்… பிரபலங்களின் ரியாக்‌ஷனும்..!

நவதேஜ் சிங் ஜோஹர், சுனில் மேரா, ரித்து டால்மியா, அமன்நாத், அயீஷ் கபூர் ஆகிய 5 பிரபலங்கள் 377வது பிரிவுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கை தாக்கல் செய்தனர்

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘ஓர் பாலின ஈர்ப்பை குற்றமாக கருதும் 377வது பிரிவு செல்லாது’ என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு வாசித்த ஒரு சில நிமிடங்களில் பாலிவுட் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர், ‘வரலாற்றுத் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பெருமையாக இருக்கிறது. மனிதநேயத்துக்கும் உரிமைகளுக்கும் 377 பிரிவு ரத்து உறுதுணையாக இருக்கும். இந்த நாடு மீண்டும் சுவாசிக்கத் தொடங்கியுள்ளது’ என்று நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டார். 

அவரைத் தொடர்ந்து அபிஷேக் பச்சன், சோனம் கபூர், அர்ஜுன் கபூர், வருண் தவான், ராஜ்குமார் ராவ், சுவரா பாஸ்கர், ப்ரீத்தி ஜிந்தா, ஜான் அபிரகாம், கொகொனா சென் ஷர்மா, ரிச்சா சத்தா, தியா மிர்சா, விக்கி கவுசல், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட நட்சத்திரங்கள் 377 பிரிவு ரத்துக்கு ஆதரவாக கருத்துகள் கூறினர். 

 

 

 

 

 

Advertisement

 

 

 

 

Advertisement

 

 

 

 

Advertisement

 

 

 

 

Advertisement

 

 

 

 

Advertisement

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


1861-ம் ஆண்டு இயற்றப்பட்ட, 377 சட்டப் பிரிவு, இயற்கைக்கு முரணான வகையில் பாலினச் சேர்க்கையை குற்றம் என்று கூறுகிறது. இதனால், ஓர் பாலின ஈர்ப்பு என்பது குற்றமாக பாவிக்கப்பட்டு வந்தது. இந்தப் பிரிவை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘ஓர் பாலின ஈர்ப்பு குற்றமான செயல் அல்ல’ என்று தீர்ப்பு வந்தது. ஆனால் 2013-ல், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ‘நாடாளுமன்றம் தான் இந்த விஷயம் குறித்து முடிவெடுக்க வேண்டும்’ என்றது. 

ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நவதேஜ் சிங் ஜோஹர், சுனில் மேரா, ரித்து டால்மியா, அமன்நாத், அயீஷ் கபூர் ஆகிய 5 பிரபலங்கள் 377வது பிரிவுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கை தாக்கல் செய்தனர். 

இதையடுத்து தான் இன்று பிரிவு 377-க்கு எதிராக தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். தீர்ப்பின் போது உச்ச நீதிமன்றம், ‘அடையாளத்தை பாதுகாப்பது தான் வாழ்வை மேன்மையடயச் செய்யும். பிரிவு 377 ஜனநாயகத்துக்கு எதிரானது. எல்ஜிபிடி சமூகத்தில் இருப்பவர்களுக்கும் மற்றவர்களைப் போல அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. பெரும்பான்மையினர் கருத்தும் பொதுவான சிந்தனையும் சட்ட சாசன உரிமைகளைத் தீர்மானிக்காது. அனைவருக்கும் தனித்துவம் என்பது உண்டு. அந்தத் தனித்துவத்தை சமூகம் இப்போது ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறது. பல விஷயங்களையும் பகுப்பாய்ந்து தான் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கிறோம். ஓர் பாலின ஈர்ப்பு என்பது மனநோய் அல்ல’ என்றது. 


 

Advertisement