Read in English
This Article is From Sep 01, 2020

பிரணாப் முகர்ஜியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது!

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதி சடங்கு இன்று முழு இராணுவ மரியாதைகளுடன் நடைபெறுகின்றன. மூளை அறுவை சிகிச்சைக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது 84 வது வயதில் நேற்று அவர் உயிரிழந்தார்.

முகர்ஜியின் மறைவையொட்டி அரசாங்கமும் பல மாநிலங்களும் ஏழு நாள் உத்தியோகபூர்வ துக்கத்தை அறிவித்துள்ளன.

பிரணாப் முகர்ஜியின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி அவரது இல்லத்திற்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினார். COVID-19 நெறிமுறை காரணமாக, முன்னாள் ஜனாதிபதியின் உடல் துப்பாக்கி வண்டிக்கு பதிலாக ஒரு ஹியர்ஸ் வேனில் இறுதி சடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும். நிகழ்ச்சிகளும் இக்காலக்கட்டத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement