This Article is From Jul 03, 2020

திமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பொறுப்பு!

பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பொறுப்பு!

திமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பொறுப்பு!

ஹைலைட்ஸ்

  • வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பொறுப்பு!
  • மாநில பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனுக்கும் துணைத் தலைவர் பொறுப்பு
  • மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் பாஜகவின் பொதுச் செயலாளராக நியமனம்

திமுகவில் இருந்து விலகி பாஜகவுக்கு சென்ற வி.பி.துரைசாமிக்கு தமிழக மாநில துணைத் தலைவர் பொறுப்பு வழங்கி மாநிலத் தலைவர் எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனுக்கும் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரை சாமி சில தினங்களுக்கு முன்பாக பாஜகவின் தமிழக தலைவர் எல்.முருகனை சந்தித்துப் பேசினார். இந்த சம்பவம் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி.துரை சாமியை நீக்கி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருந்தார். தொடர்ந்து, வி.பி.துரைசாமிக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 

இதனிடையே, பொறுப்பு நீக்கப்பட்ட துரைசாமி, மறுநாளே பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'பாஜகவால் இந்தியா பாதுகாப்பான கரங்களுக்குள் இருக்கிறது. பாஜகவின் கொள்கைகளை ஏற்று நடந்தால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்' என்று தெரிவித்தார்.

மேலும், திமுக தனது கொள்கையில் இருந்து மாறிச் சென்று விட்டது. அப்படியிருக்கையில் நான் அந்த கட்சியை விட்டு விலகுவதில் என்ன தவறு இருக்கிறது.' என்று கூறிய அவர், கருணாநிதியின் அழைப்பை ஏற்றுத்தான் திமுகவில் தான் சேர்ந்ததாகவும், தற்போது பாஜகவின் கொள்கைகளை முழுவதுமாக ஏற்று கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

திமுகவில் துரைசாமிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் சில தினங்களுக்கு முன்பாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசினார். இதனால் அவர் கட்சி தாவக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டு அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத் தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், பாஜகவில் இணைந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

.