Read in English
This Article is From Jul 19, 2018

நீட் வினாத்தாள் மொழிபெயர்ப்புக்கு, மாநில அரசுகளிடம் ஒப்புதல் கடிதம் பெறப்படும் - அமைச்சர்

அ.தி.மு.க உறுப்பினர் விஜிலா சத்யானந்த், நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பில் பிழைகள் இருந்தது பற்றி, மாநிலங்களவையின் பூஜ்ய நேரத்தில் கேள்வி எழுப்பினார்

Advertisement
Education
New Delhi:

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு வினாத்தாள், சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய மத்திய அரசு, மாநில அரசுகளிடம்  ஒப்புதல் கடிதம் பெற உள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க உறுப்பினர் விஜிலா சத்யானந்த், நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பில் பிழைகள் இருந்தது பற்றி, மாநிலங்களவையின் பூஜ்ய நேரத்தில் கேள்வி எழுப்பினார். நடந்த முடிந்த நீட் தேர்வில், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 49 கேள்விகளில் பிழைகள் இருந்ததாகவும், இதனால் மாணவர்கள் தேர்வில் திணறியதாகவும் விஜிலா கூறியிருந்தார். 

 

 

 

Advertisement

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது. அந்த தீர்ப்பின் மீது மத்திய அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதுபற்றி பேசா மறுத்துவிட்டார் பிரகாஷ் ஜவ்டேக்கர். ஆனால், வினாத்தாளை மொழிபெயர்த்தவர்கள் தமிழக அரசு நியமித்த மொழிபெயர்ப்பாளர்கள் தான், என்று அவர் கூறினார். மேலும், தொடர்ந்த அவர், அடுத்த ஆண்டு முதல் மொழிபெயர்ப்பு சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய, மாநில அரசுகளிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

வெளி மாநிலங்களுக்கு சென்று மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் நிலை உள்ளதை பற்றி விஜிலா கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜவ்டேக்கர், அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் அவர்கள் வசிக்கு இடத்துக்கு அருகிலேயே தேர்வு எழுத வசதி செய்யப்படும் என்று ஏற்கென்வே உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement