This Article is From Nov 23, 2018

குஜராத்தில் மேலும் ஒரு சிலை! சிலைகளின் தலைநகரமாகும் குஜராத் மாநிலம்

குஜராத்தில் உள்ள காந்தி நகரில் 80 அடி உயர புத்தரின் சிலையை நிறுவப்பட உள்ளது

குஜராத்தில் மேலும் ஒரு சிலை! சிலைகளின் தலைநகரமாகும் குஜராத் மாநிலம்

80-அடி உயரத்தில் கட்டப்பட உள்ள புத்த சிலை

Ahmedabad:

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல்லுக்கு மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 182 அடி உயரத்தில் ‘ ஒற்றுமையின் சிலை' ஒன்றை குஜராத்தில் நிறுவியது.

உலகத்தின் மிக உயரமான சிலை என அறிவிக்கப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து தற்போது குஜராத்தில் மேலும் ஒரு சிலை நிறுவப்பட உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள காந்தி நகரில் 80 அடி உயர புத்தரின் சிலையை நிறுவ கடந்த வியாழனன்று சங்கஹாயா, எனப்படும் புத்த தொண்டு நிறுவனம் கோரிக்கை வைத்தது.

மேலும் அந்த நிறுவனம் வல்லபாய் படேல் சிலையை செய்த சிற்பி ராம் சுதாரை இப்பணிகளில் அமர்த்த முடிவு செய்துள்ளது. 

‘எங்களுக்கு விரைவில் நிலம் கிடைக்கும், பீகாரில் மட்டும் புத்த மதத்தினர் வசிப்பதில்லை வடக்கிலும் பலர் வசிக்கிறார்கள், குஜராத்தில் இந்த சிலை அமைப்பது புண்ணியம். மேலும் பழங்கால  சீன பயணிகள் குறிப்பிட்ட நாளந்தா பல்கலைகழகத்தை போல குஜராத்திலும் பல்கலைகழகங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர் ' என  அத்தொண்டு நிறுவனத்தின் தலைவர் பன்டே பிராஷில் ரத்னா, அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அந்நிறுவனம் மேலும் ஒரு கட்டிடத்தை, தேவ் நீ மோரி என்னும் புத்த தொல்பொருள் ஆராய்ச்சி இடத்தில் நிறுவப்போவதாக  கூடுதல் தகவலையும் அளித்துள்ளது.

.