This Article is From Nov 01, 2018

படேலுக்கு சிலை எழுப்பிய பாஜக, காந்திக்கு சிலை எழுப்பாதது ஏன்? சசிதரூர் கேள்வி

மகாத்மா காந்திக்கு இது போன்ற பிரம்மாண்ட சிலைகள் நாட்டில் எங்கும் இல்லை என காங்கிரஸ் பிரமுகர் தெரிவித்துள்ளார்

படேலுக்கு சிலை எழுப்பிய பாஜக, காந்திக்கு சிலை எழுப்பாதது ஏன்? சசிதரூர் கேள்வி

குஜராத்தில் 182மீ உயர சர்தார் வல்லபாய் படேல் சிலை நேற்று திறக்கப்பட்டது.

Thiruvananthapuram:

மகாத்மா காந்தியின் சீடரான சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரமுள்ள மிகப்பெரிய சிலையை எழுப்பிய பாஜக, மகாத்மா காந்திக்கு இதுபோன்ற சிலையை எழுப்பாதது ஏன் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சசிதரூர், மகாத்மா காந்திக்கு இது போன்ற பிரம்மாண்ட சிலைகள் நாட்டில் எங்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் காந்திக்கு பெரிய சிலை உள்ளது. ஆனால், அவரது சீடருக்கு 182 மீ உயர சிலையை எழுப்பியுள்ளனர். மகாத்மா காந்திக்கு இது போன்ற உயரமான சிலை இல்லாத போது, காந்தியின் சீடருக்கு இவ்வளவு பெரிய சிலை எதற்காக?

சர்தார் வல்லபாய் படேல் மிகவும் எளிமையான மனிதர். காந்திஜியின் சீடர் என்று அனைவராலும் அறியப்பட்டவர். நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.. காந்தியின் கொள்கையை பின்பற்றியவர், ஏழைகளுடன் இணைந்து வாழ்ந்த அப்படி ஒருவருக்கு. இதுபோன்ற பெரிய சிலை எழுப்புவது சரியா?

மாகத்மா காந்திக்கு இதுபோன்ற பெரிய சிலை எழுப்பாதது ஏன் என்ற கேள்விக்கு பாஐகவிடம் பதில் இருக்காது. ஏனெனில், மகாத்மா காந்தியின் கொள்கையான அகிம்சையின் மீது பாஜகவிற்கு நம்பிக்கை இல்லை.

சர்தார் வல்லபாய் படேல் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறுகளை தங்கள் பக்கம் கடத்திக்கொண்டு செல்ல பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். பாஜகவின் வரலாற்றில், இப்படி சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஒருவரும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

.