பிரதமர் மோடி சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அக்.31 ஆம் தேதி நாட்டிற்கு அர்பணித்தார்.
Ahmedabad: நர்மதா மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு விமான மற்றும் ரயில் சேவை விரைவில் வழங்கப்படும் என்று குஜராத் அரசாங்கம் வெள்ளியன்று தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜய் ரூபானி டெல்லி சென்றிருந்தபோது இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் இந்திய ரயில்வே வாரிய அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்திற்கு பின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை சர்தார் சரோவர் அணை அருகில் கட்டப்பட்டுள்ளது. அதை பிரதமர் மோடி அக்.31 ஆம் தேதி நாட்டிற்கு அர்பணித்தார். நர்மதாவில் உள்ள ராஜ்பைபலா கேவடியில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது.