This Article is From Dec 22, 2018

ரூ. 1.2 கோடியை நூதன முறையில் அபகரித்து நாடகமாடிய ஏ.டி.எம். பணியாளர்கள் 4 பேர் கைது

விபத்து நடந்ததாகவும் அப்போது, அடையாளம் தெரியாத நபர்களால் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் 4 பேர் முன்னதாக புகார் அளித்திருந்தனர்.

ரூ. 1.2 கோடியை நூதன முறையில் அபகரித்து நாடகமாடிய ஏ.டி.எம். பணியாளர்கள் 4 பேர் கைது

மொத்தம் ரூ. 1.6 கோடி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

Ramanathapuram:

விபத்து நடந்ததாக கூறி நூதன முறையில் ரூ. 1.2 கோடி பணத்தை அபகரிக்க முயன்ற ஏ.டி.எம். பணியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்புவதற்காக மொத்தம் ரூ. 1.60 கோடி பணத்தை 4 ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

முதல்கட்டமாக ரூ. 40 லட்சத்தை ஒரு ஏ.டி.எம்.-ல்  அவர்கள் நிரப்பியுள்ளனர். மீதம் இருந்த பணத்தை கொண்டு சென்றபோது போலியான விபத்தை ஏற்படுத்தி அவர்கள் நாடகமாடியுள்ளனர்.

பின்னர் அவர்கள் தரப்பில், வாகனத்தில் இருந்த ரூ. 1.20 கோடி ரூபாய் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நாடகம் ஆடியது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் ரூ. 32 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மீத தொகையை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

.