This Article is From Dec 17, 2018

ஸ்டெர்லைட் விவகாரத்தில் திருப்பம்: தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முன் அறிவிப்பு இன்றி தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் திருப்பம்: தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் முக்கிய திருப்பமாக தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நடந்த தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், ஸ்டர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. 3 வாரத்திற்குள் இதனை செய்து முடிக்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக மேல் முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து இன்றைக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முன் அறிவிப்பு இன்றி தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும் போராட்டத்திற்கு பின்னர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதனை திறக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து நடைபெற்று வரும் சட்ட போராட்டங்களால் தமிழகத்தில் ஸ்டெர்லைட் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

.