This Article is From Dec 21, 2018

ஸ்டெர்லைட் ஆலை 2 மாதங்களில் திறக்கப்படும்: தலைமை செயல் அதிகாரி அறிவிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரு மாதங்களில் திறக்கப்படும் என ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் அறிவித்துள்ளார்.

Advertisement
Tamil Nadu Posted by

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரு மாதங்களில் திறக்கப்படும் என ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆலை குறித்து ஆய்வு செய்ய ஒய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆய்வு நடத்துமாறு தீர்ப்பயாம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆலையை ஆய்வு செய்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, ஆலையை திறக்கலாம். ஆலையை மூடியது சரியல்ல எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் சமீபத்தில் அறிக்கை அளித்திருந்தது.

Advertisement

இதனையடுத்து தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று, விசாரணை முடிவடைந்ததை அடுத்து, சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், 3 வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஸ்டெர்லைட் ஆலை இரு மாதங்களில் திறக்கப்படும். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால், ஆலையைத் திறக்க அரசிடம் அனுமதி கேரியுள்ளோம். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த புதிய விதிமுறைகளை நிறைவேற்ற எங்களுக்கும் இன்னும் நேரம் இருக்கிறது.

Advertisement

புதிய நிபந்தனைகளை கடைபிடிப்போம். தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். ஆலை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சமூக நலத்திட்டங்கள் வழங்க முடிவு செய்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement