ஏன் ஸ்டெர்லைட் ஆலயம் இன்னும் மூடப்பட வில்லை என கேள்விக்கேட்டுள்ளார்.
ஹைலைட்ஸ்
- உங்கள் பிள்ளைக்கு இப்படி காயமடைந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்
- ஆலயத்தை இயக்க விட மாட்டோம் என அமைச்சர் பதிலளித்தார்
- ஏன் ஸ்டெர்லைட் ஆலயம் என் இன்னும் மூடப்பட வில்லை என கேள்விக்கேட்டுள்ளார்
Chennai:
கடந்த வாரம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காயமடைந்தோரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சந்திக்க சென்ற அமைச்சரை ஒரு தாய் சரமாரியாக கேள்வி கேக்கும் வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
அத்தாயின் மகன் போராட்டத்தில் காயமடைந்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார், அப்போது அவரை பார்வையிட சென்ற பொத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இடம் அப்பெண் ஏன் ஸ்டெர்லைட் ஆலயம் இன்னும் மூடப்பட வில்லை என கேள்விக்கேட்டுள்ளார்.
மேலும் தலையில் காயமடைந்த தன் மகனை காட்டி"உங்கள் பிள்ளைக்கு இப்படி காயமடைந்தால் என்ன செய்வீர்கள் என்றும் கேட்டார்"
அவரை சமாதானம் செய்ய முயன்ற அமைச்சர் "நானும் தூத்துக்குடி தான் உங்கள் வலி எனக்கு புரிகிறது" என ஆறுதல் அளித்தார்.
அப்பொழுது நடுவில் பேசிய அப்பனின் மகன் ஆலயத்தை மூடப்படும் என எழுதி தர முடியுமா என்று கேட்டதற்கு, "ஆலயத்தை இயக்க விட மாட்டோம்" என அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சரின் வார்த்தைகள் சமாதானம் செய்ய சொல்லப்பட்டதா இல்லை உண்மையா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.