Read in English
This Article is From Oct 16, 2019

சுரங்க வெடியில் சிதறிய கல்! சாலையில் சென்ற கார் கண்ணாடியை உடைத்து தாக்கியதில் வங்கி மேலாளர் பலி!

எங்கோ ஒரு சுரங்கத்தில் வெடி வெடித்து கல் ஒன்று சிதறிவர, அது சம்பந்தமே இல்லாத சாலையில் சென்ற கார் கண்ணாடியை உடைத்துள்ளது. இதில் அந்தக் கல் பட்டு வங்கி மேலாளர் உயிரிழந்திருப்பது துரதிருஷ்டவசமாக பார்க்கப்படுகிறது.

Advertisement
இந்தியா Edited by

காருக்குள் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.

Betul, Madhya Pradesh:

மத்திய பிரதேசத்தில் சுரங்கத்தில் வைக்கப்பட்ட வெடியில் அங்கிருந்த கற்கள் சிதறிச் சென்றன. அவற்றில் ஒரு கல் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற தனியார் வங்கியின் மேலாளர் அசோக் பவார் என்பவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். 

மத்திய பிரதேச மாநிலத்தின் பெடூல் - நாக்பூர் நான்கு வழிச்சாலையில் பங்கா ஜாட் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. 

கார் கண்ணாடியை உடைத்த கல் மிகவும் கூர்மையாக இருந்ததாகவும், இதில் காயம்பட்ட அசோக் பவார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேகமாக வந்த கல் தாக்கியதில், பவாரின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்திருக்கிறது. 

Advertisement

எங்கோ ஒரு சுரங்கத்தில் வெடி வெடித்து கல் ஒன்று சிதறிவர, அது சம்பந்தமே இல்லாத சாலையில் சென்ற கார் கண்ணாடியை உடைத்துள்ளது. இதில் அந்தக் கல் பட்டு வங்கி மேலாளர் உயிரிழந்திருப்பது துரதிருஷ்டவசமாக பார்க்கப்படுகிறது. 

எதற்காக சுரங்கத்தில் வைக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் சென்ற இன்னும் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். 
 

Advertisement
Advertisement