This Article is From Jul 25, 2019

“தமிழகத்தின் 5 மாவட்டங்களை பாதிக்கும் திட்டம் அது!”- தமிழக அரசுக்கு எதிராக கொதிக்கும் ஸ்டாலின்

ஆந்திராவில் குப்பம் மண்டல் பகுதியில் ஓடும் பாலாற்றில், தடுப்பணை உயரத்தை அதிகரிக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

“தமிழகத்தின் 5 மாவட்டங்களை பாதிக்கும் திட்டம் அது!”- தமிழக அரசுக்கு எதிராக கொதிக்கும் ஸ்டாலின்

தற்போது அங்கு 22 அடியாக இருக்கும் தடுப்பணை உயரத்தை 40 அடியாக உயர்த்த ஆந்திரா நடவடிக்கை எடுத்துள்ளது

Chennai:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர பிரதேச அரசு, பாலாற்றில் தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க எடுக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

கர்நாடகாவில் தொடங்கும் பாலாறு, ஆந்திரா, தமிழகம் வழியாக பாய்ந்து, வங்காள விரிகுடாவில் கலக்கும். இந்நிலையில் ஆந்திராவில் குப்பம் மண்டல் பகுதியில் ஓடும் பாலாற்றில், தடுப்பணை உயரத்தை அதிகரிக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது அங்கு 22 அடியாக இருக்கும் தடுப்பணை உயரத்தை 40 அடியாக உயர்த்த ஆந்திரா நடவடிக்கை எடுத்துள்ளது. இது மாநில நதிநீர் பங்கீட்டுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. 

இது குறித்து செய்தியாளர்கள் மத்தியல் பேசிய மு.க.ஸ்டாலின், “ஆந்திர அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. ஆந்திர அரசின் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை தமிழக அரசும் கைகட்டி வேடிக்கைப் பார்த்து வருகிறது. ஆந்திர அரசு மட்டும் பாலாற்றில் தடுப்பணையின் உயரத்தை அதிகருக்குமேயானால், அது வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான நீர் வரத்தை பாதிக்கும்” என்று கூறியுள்ளார். 

அவர் மேலும், “இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடுப்பணைக் கட்டுவதற்கு தடை வாங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.