Read in English
This Article is From Mar 09, 2019

தேர்தலுக்காக ராணுவ நடவடிக்கைகளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்! - முன்னாள் கடற்படை தலைவர்

முன்னாள் கடற்படை தலைவர் ராமதாஸ், தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோராவுக்கு எழுதிய கடிதத்தில், சமீப காலமாக ராணுவ நடவடிக்கைகளை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி வரும் நிலை குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

பாலக்கோட் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படையின் மிரேஜ் 2000 தாக்குதல் நடத்தியது.

New Delhi:

புல்வாமா தாக்குதல், பாலக்கோட் விமானப்படை தாக்குதல், விங் கமாண்டர் அபினந்தன் நடவடிக்கை உள்ளிட்டவற்றை தேர்தல் பிரசாரங்களுக்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்த உடனடியாக தடை விதக்க வேண்டும் என முன்னாள் கடற்படை தலைவர் ராமதாஸ், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோராவுக்கு எழுதிய கடிதத்தில், சமீப காலமாக அரசியல் கட்சிகள் ராணுவ நடவடிக்கைகளை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி வரும் நிலை குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கு நிலையில், சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளை எந்த அரசியல் கட்சிகளும் அரசியல் ஆதாயத்துக்காக தவறாக பயன்படுத்த விடக்கூடாது. 

Advertisement

இதுபோன்ற நாட்டுப்பற்று அல்லது வெற்றி செய்தி போன்றவற்றை தேர்தலுக்கு பயன்படுத்தும்போது அது தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும் என்று அவர் கூறிப்பிட்டுள்ளார். 

ராணுவப் படைகள் எப்போதும் ஒரு அமைப்பு, ஒரு பண்பாடு மற்றும் அரசியலற்ற மற்றும் மத சார்பற்ற நிலையில் இருந்துவருகிறது. 

Advertisement

இப்படிபட்ட சூழலில், ஒரு சில அரசியல் கட்சிகள் ராணுவ நடவடிக்கைகள், புகைப்படங்கள், ராணுவ சீருடை உள்ளிட்டவற்றை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகிறது. இதேபோல், சுவரொட்டிகள் மற்றும் பானர்களிலும் ராணுவ வீரர்கள் புகைப்படங்களை பயன்படுத்துகின்றன. 

இப்படிப்பட நிகழ்வுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ராணுவப்படைகளின் மதிப்பீட்டு முறையையும் அழிக்கக்கூடியது, அரசியல் சட்டத்திற்கும் எதிரானது. 

Advertisement

இதனால், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, ராணுவ வீரர்கள் புகைப்படங்கள், ராணுவ சீருடை, சுவரொட்டிகள் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement