This Article is From Nov 26, 2018

''காங்கிரஸ் மீது புகார் சொல்வதை முதலில் நிறுத்துங்கள்'' - மோடிக்கு சிவசேனா அறிவுரை

ராமர் கோயில் விவாகரம் தொடர்பாக மத்திய பாஜகவை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது

''காங்கிரஸ் மீது புகார் சொல்வதை முதலில் நிறுத்துங்கள்'' - மோடிக்கு சிவசேனா அறிவுரை

உத்தரப்பிரதேசத்தில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சுற்றுப் பயணம் செய்துள்ளார்.

Mumbai:

ராமர் கோயில் விவாகரத்தில் ஆளும் மத்திய பாஜக அரசை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் மீது புகார் கூறுவதை முதலில் நிறுத்து விட்டு ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அக்கட்சி கூறியுள்ளது.

ராமர் கோயில் விவகாரத்தை சிவசேனா கட்சி கையில் எடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்திக்கு சென்று ராமர் கோயிலை கட்ட வலியுறுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு சென்றனர்.

ராமர் கோயிலை கட்டும் தேதியை அறிவிக்க வேண்டும் என்றும், அதற்கான அவசர சட்டத்தை நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டு வர வேண்டும் என்றும் சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிவசேனா கட்சி இதழான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

ராமர் கோயிலை கட்டுவதற்கு அரசியல் ஆர்வம் இன்னும் ஏற்படவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தைரியர் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. அதனால்தான் அக்கட்சி ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டது. அதன்பின்னர் 56 இன்ச் மார்பு கொண்ட மோடிக்கு மக்கள் வாக்களித்தனர்.

காங்கிரசைப் பற்றியும், ராகுல் காந்தி குடும்பத்தையும் பற்றி பேசுவதை பிரதமர் மோடி முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மக்கள் உங்களை பிரதமராக்கவில்லை. மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் ராமர் கோயிலை கட்டாததால் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சி எதிர்த்தபோதிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தீர்கள். ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி எதிர்த்தபோதிலும் ஆட்சியை அமைத்தீர்கள். 

அப்படியிருக்கையில், ராமர் கோயிலை கட்டாமல் ஏன் தாமதம் செய்கிறீர்கள்?

இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
 

.