This Article is From Dec 17, 2019

Viral Pic: கமாண்டருக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்த நாய்

ராணுவத்தின் ஆர்.வி.சி நாய்கள், கழுதைகள் மற்றூம் குதிரைகளை பராமரிக்கிறது. அவை கடினமான நிலப்பரப்புகளிலும் இடங்களிலும் செயல்பட உதவுகின்றன.

Viral Pic: கமாண்டருக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்த நாய்

ராணுவ நாயான மேனகா சல்யூட் செய்யும் காட்சி

நாய் ஒன்று கமாண்டர் லெப்டினெனண்ட் ஜெனரல் கே.ஜே.எஸ் தில்லனுக்கு சல்யூட் செய்வது போன்ற படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. புகைப்படத்தில் கமாண்டரும் பதிலுக்கு நாய்க்கு சல்யூட் செய்வதை பார்க்கலாம்.

இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரையின் முதல் நாளான ஜூலை 1-ம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக ஏ.என்.ஐயிடம் பேசிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 

“கமாண்டர் தரிசனத்திற்காக குகைக்கு சென்று கொண்டிருந்தபோது அதற்கு 50 மீட்டர்  முன்னதாக நாய் அவருக்கு வணக்கம் செலுத்தியது” என்று அவர்கள் கூறினார்கள்.

இந்திய ராணுவ மரபின் படி மூத்தவர்களுக்கு சல்யூட்டை திரும்ப செய்ய வேண்டும். தில்லனும் பதிலுக்கு சல்யூட் அடித்தார்.

நாய்கள் ராணுவத்தில் பயங்கரவாதிகள் மற்றும் வெடி பொருட்களை கண்டறிய உதவுகின்றன

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்றதற்காக நாய்கள் துணிச்சலுக்கான பதக்கங்களை பெற்றுள்ளன

ராணுவத்தின் ஆர்.வி.சி நாய்கள், கழுதைகள் மற்றூம் குதிரைகளை பராமரிக்கிறது. அவை கடினமான நிலப்பரப்புகளிலும் இடங்களிலும் செயல்பட உதவுகின்றன. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


.