This Article is From Feb 16, 2019

டி.ஆர். முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய சிம்புவின் தம்பி

சிம்புவின் தம்பி குறளரசன் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

டி.ஆர். முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய சிம்புவின் தம்பி

நடிகர் டி. ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த டி. ராஜேந்தர் வலை தளங்களில் இன்னமும் ட்ரெண்டாக உள்ளார். அவருக்கு சிம்பு, குறளரசன் என்ற 2 மகன்களும், இலக்கியா என்ற மகளும் உள்ளனர்.

மூத்த மகன் எஸ்.டி.ஆர். என அழைக்கப்படும் சிம்புவை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. 2-வது மகன் குறளரசன் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் தந்தை டி. ராஜேந்தர் தாயார் உஷா ராஜேந்தர் முன்னிலையில் குறளரசன் நேற்று இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். சென்னை மெக்கா மசூதியில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேட்டியளித்த டி. ராஜேந்தர் மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவனது முடிவுக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க - “என் மகனால் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது - ஏ.ஆர். முருகதாஸ்!

.