This Article is From Jan 28, 2019

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்!”- மீடியாவிடம் உருகிய சிம்பு

நடிகர் சிம்புவின் திரைப்படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரப் போகிறது.

Advertisement
தமிழ்நாடு Posted by

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து உருக்கமாக பேசியுள்ளார் சிம்பு

Highlights

  • சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் பிப் 1-ல் ரிலீஸ் ஆகிறது
  • இதையொட்டித்தான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சிம்பு
  • மீடியாவிடம் சிம்பு மன்னிப்பும் கேட்டுள்ளார்

நடிகர் சிம்புவின் திரைப்படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்' இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரப் போகிறது. இந்நிலையில், அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து உருக்கமாக பேசியுள்ளார்.

சமீபத்தில் அஜித்தின் ‘விஸ்வாசம்' திரைப்படம் வெளியானது. அதை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் படம் வெளியான திரையரங்குகளின் அருகில் பிரமாண்ட பேனர் மற்றும் கட்-அவுட்களை வைத்தனர். அப்படி ஒரு கட்-அவுட் வைக்கும்போது, நேர்ந்த விபத்தில் ரசிகர் ஒருவர் பலியானார். இதையடுத்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், “என்னுடைய படம் வெளிவரும்போது, எனது ரசிகர்கள் ஆன நீங்கள் அண்டா அண்டாவாக பால் ஊத்துறீங்க. வேற லெவல்ல செய்றோம்” என்றார்.

இது பலத்த சர்ச்சைக்கு உள்ளான நிலையில், சில நாட்களிலேயே, “என் படத்திற்கு பேனர், கட-அவுட் என்ற எந்த ஆடம்பரமும் வேண்டாம். அதை வைத்து நாம் மாஸ் காட்ட வேண்டாம். உங்கள் பெற்றோருக்கு புதிதாக உடை வாங்கி கொடுங்கள். அந்த அன்பு எனக்குப் போதும்” என்றார்.

இது மிகுந்த குழப்பத்தை உருவாக்கிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சிம்பு, “ஒரு ரசிகர், நடிகருக்காக கட்-அவுட் வைக்கும்போது விழுந்து இறந்துள்ளார், என்பதை கேட்டு ‘இனி எனக்காக கட்-அவுட் வைக்க வேண்டாம்' என்று பகிரங்கமாக அறிவித்தேன். அப்போது அது பிரபலமாகவில்லை.

Advertisement

அதையடுத்துத்தான் நான், ‘அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள்' என்று வீடியோ வெளியிட்டு சொன்னேன். இப்போதும் அதைத்தான் சொல்கிறேன். அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள். கட்-அவுட்டுக்கு அல்ல. என் திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது வரும் மக்களுக்கு. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னதை மறப்பவன் நான் இல்லை. ஒரு விஷயத்தை நெகட்டிவாக சொல்லி பின்னர் அது குறித்து பாசிடிவாக சொன்னால்தான் மக்களை சென்றடைகிறது. அதனால்தான் இந்த யுக்தியைக் கையாண்டேன். நான் செய்தது தவறென்றால் என்னை மன்னித்துவிடவும். எனக்கு ரசிகர்களின் அன்பு மட்டும் போதும். வேறு எதுவும் வேண்டாம்” என்று உருக்கமாக பேசினார்.

Advertisement