This Article is From Mar 02, 2020

கொரோனா பாதிக்கப்பட்ட ஈரானில் தமிழக மீனவர்கள் சிக்கித் தவிப்பு!

இதற்கு அளிக்கப்பட்டுள்ள முறையான பதிலில், ஈரான் இந்தியத் தூதர் கடாம் தர்மேந்திரா, சனிக்கிழமை நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களின்  முன் ஏற்பாடுகளுக்காக அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

Advertisement
இந்தியா Posted by
Chennai/ New Delhi:

ஈரானின் கிஷ் தீவில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள், அவசர உதவியைக் கோரி SOS வீடியோ மூலமாக அழைப்பு விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான ஈரானில், படகுகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். அவர்களின் உணவு மற்றும் எரிபொருள் பொருட்கள் தீர்ந்துவிட்டதாகவும், அவர்கள் தங்களைக் காப்பாற்ற முகமூடிகள் கூட இல்லை என்றும் கூறுகிறார்கள்.  அவர்கள் தமிழில் பேசுவதைக் வீடியோவில்  கேட்க முடிகிறது.

துபாயில் இருந்து ஈரானுக்குச் சென்ற இந்த மீனவர்களுக்கு அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மட்டுமே  உணவு உண்டு என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஏற்கனவே மத்திய அரசிடம் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ள நிலையில், துன்பத்தில் உள்ள குடும்பங்கள் தங்களுக்கு இன்னும் உதவிகள் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

ஈரான் நாட்டில் உள்ள அசலூர் (Azalur) என்கிற பகுதியில்  சிக்கி தவிக்கும் கேரளாவைச் சேர்ந்த சுமார் 60 மீனவர்களும் இதேபோன்ற முறையீடுகள் செய்துள்ளனர். "நாங்கள் ஈரானில் அசலூரில் சிக்கித் தவிக்கிறோம். இந்த நாட்டில் கொரோனா வைரஸ் வெடித்ததால், நாங்கள் எங்கள் அறைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம், வெளியேற முடியாது" என்று ஒரு மனிதன் சமூக ஊடகங்களில் ஒரு SOS வீடியோவில் கூறுகிறார்.

Advertisement

ஈரானின் அசலூரில் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் சிக்கியுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார் - அவர்களில் 60 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அளிக்கப்பட்டுள்ள முறையான பதிலில், ஈரான் இந்தியத் தூதர் கடாம் தர்மேந்திரா, சனிக்கிழமை நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களின்  முன் ஏற்பாடுகளுக்காக அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

Advertisement

சீனாவில் தோன்றிய கொடிய கொரோனா வைரஸ் கடந்த இரண்டு மாதங்களில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பால் உலக சுகாதார அவசரநிலை என அறிவிக்கப்பட்ட இந்த நோயால் உலகெங்கிலும் 3,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 80,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

Advertisement