This Article is From Feb 02, 2019

மாற்றத்தை எதிர்நோக்கும் மேற்கு வங்க மக்கள்! - மம்தாவை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் அவர்கள், மம்தாவினை தூக்கி எறிய தீர்மானித்துள்ளனர் என்று மேற்கு வங்கத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Durgapur:

இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்கட்சிகளை ஒன்றினைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

நவீன இந்தியாவின் வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வளர்ச்சியோடு ஒன்றிணைந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும். உங்களை எல்லாம் பார்க்கும்போது இந்த மாநிலம் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்பதை என்னால் அறிந்துகொள்ள முடிகிறது.

நீங்கள் எங்கள்மீது செலுத்தும் இந்த அன்பைப் பார்த்து கலக்கமடைந்துள்ள மம்தா பானர்ஜி பாஜகவினருக்கு எதிரான வன்முறை தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிறார்.

பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் வரலாற்று சிறப்புக்குரிய பட்ஜெட். இதன் மூலம் விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் உழைப்பாளிகளும் பயன் பெறுவார்கள்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது என்பது விவசாயிகளின் கண்களில் மண்ணை தூவுவது போன்ற செயலாகும். நீங்கள் இனி கடன் தள்ளுபடிக்காக காத்திருக்க வேண்டியதில்லை.

எந்த இடைத்தரகர்களின் இடையூறும் இல்லாமல் உங்கள் கணக்குகளில் இனி ஆண்டுக்கு 6000 ரூபாய் வந்து சேர்ந்து விடும். இதன் மூலம் 12 கோடி சிறு விவசாயிகள் பலனடைவார்கள் என்று கூறினார்.


 

.