ஜெர்மன் செப்பர்ஸ் மற்றும் லாப்ரடோர்ஸ் போன்ற வெளிநாட்டு நாய்களுக்கு மட்டுமே வெடிபொருட்களை கண்டறியும் பயிற்சியினை காவல்துறை வழங்கி வருகிறது.
உத்தரகண்ட் காவல் துறையின் நாய்களுக்கான அணியில் தவறுதலாக சேர்க்கப்பட்ட தெரு நாய், பயிற்சிக்குப் பின் அங்குள்ள மற்ற எல்லா நாய்களையும் விட சிறப்பாக செயல்படுகிறது. பல ஆண்டுகளாக ஜெர்மன் செப்பர்ஸ் மற்றும் லாப்ரடோர்ஸ் போன்ற வெளிநாட்டு நாய்களுக்கு மட்டுமே வெடிபொருட்களை கண்டறியும் பயிற்சியினை காவல்துறை வழங்கி வருகிறது.
உத்தரகண்ட் காவல்துறை தன் ட்விட் பக்கத்தில் தவறான நாய்க்கு பயிற்சி அளித்தோம். இப்போது அவர்தான் அணியின் பெருமை என்று தெரிவித்துள்ளது.
தெருவில் சுற்றித் திரிந்த நாய் இப்போது உத்தரகண்ட் காவல்துறையின் பெருமை என்று எழுதி நாயின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர். காவல்துறையின் பயிற்சிக்குப் பின் தெருநாயின் மதிப்பு லட்சமாக மதிப்பு உயர்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் மிகுந்த அன்பைப் பெற்றுள்ளது. காவல்துறையின் ஸ்னிஃபர் நாய் அணி தடை தாண்டும் ஓட்டத்தில் நாய் பங்கேற்கும் வீடியோ பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்த ட்விட் பதிவினை கண்ட பலரும் உத்தரகண்ட் காவல்துறையினரை பலரும் பாராட்டியுள்ளனர். இந்திய நாய்கள் வெளிநாட்டு நாய் இனங்களுக்கு சற்றும் சலைத்தது அல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.
Click for more
trending news