This Article is From Nov 19, 2019

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களுடன் 480 கி.மீ. தூரம் நடந்து செல்லும் நாய்!

பாத யாத்திரையாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுடன் சேர்ந்து நாயும் தனது பயணத்தை தொடங்கியது. முதலில் பக்தர்களை நாயை சரியாக கவனிக்கவில்லை. தங்களை பின்தொடர்வதை உணர்ந்த அவர்கள், நாய்க்கு உணவு அளித்து தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களுடன் 480 கி.மீ. தூரம் நடந்து செல்லும் நாய்!

பக்தர்களுடன் சபரிமலைக்கு செல்லும் நாய்.

Chikkamagaluru:

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு பக்தர்களுடன் சேர்ந்த ஆந்திராவை சேர்ந்த நாய் பயணத்தை தொடங்கியுள்ளது. பக்தர்களுடன் நடந்து சென்ற நாய் தற்போதுவரை 480 கிலோ மீட்டரை கடந்திருக்கிறது. இடையில் காயம் ஏற்பட்ட போதிலும், பயணத்தை இந்த நாய் நிறுத்தவில்லை. 

ஆந்திர மாநிலம் திருமலாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 13 பேர் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். பக்தர்களை குருசாமி ராஜேஷ் என்பவர் வழிநடத்தி சென்றுள்ளார். 

அவர்களது பயணம் கடந்த மாதம் 31-ம்தேதி தொடங்கியது. அப்போது, தெருநாய் ஒன்று பக்தர்களை பின்தொடர்ந்து சென்றது.

தங்களை தெருநாய் பின்தொடர்வதை ஐயப்ப பக்தர்கள் முதலில் அறியவில்லை. 2, 3 நாட்களுக்குப் பின்னர்தான் நாயின் நடைபயணம் குறித்து பக்தர்கள் உணர்ந்தனர்.
 

இதையடுத்து நாய்க்கு உணவு, நீர் ஆகாரம் வழங்கி ஐயப்ப பக்தர்கள் அன்புடன் கவனித்துக் கொண்டனர். இடையே நாயில் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதனை உள்ளூர் கால்நடை மருத்துவர்களிடம் காண்பித்து பக்தர்கள் சிகிச்சை வழங்கினர். 

தற்போது ஐயப்ப பக்தர்களுடன் சேர்ந்து நாய், 480 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, கர்நாடக மாநிலம் சிக்மகளுருவில் உள்ள கொட்டிகாராவை அடைந்துள்ளது. அது சபரிமலைக்கு செல்லுமா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும். 

மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. 41 நாட்களுக்கு பூஜைக்காக நடை திறந்திருக்கும். 

.