This Article is From Sep 03, 2018

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நியாயம் கேட்டு போராடும் அரசு பள்ளி மாணவன்

அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் நவநீத கிருஷ்ணன்.

Advertisement
தெற்கு Posted by

கோவையில் பள்ளி மாணவர் ஒருவர் தனது வீட்டிற்கும் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவ்ர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான்காவது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கு நவநீத கிருஷ்ணன், இதற்கு முன் மூன்று முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நவநீத கிருஷ்ணனின் வீட்டுக்கு செல்லும் பாதையை, சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் நவநீத கிருஷ்ணன்.

ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தனது வீட்டுக்கு வரும் மின் மற்றும் நீர் இணைப்புகளையும் நீக்கி விட்டதாகவும், தங்கள் குடும்பத்தை துன்புறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து மனு கொடுக்க வருவதால் தன்னால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்றும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார். சரியான பதில் கிடைக்காத போதும், தொடர்ந்து தனக்கு கிடைக்க வேண்டிய நியாயத்துக்காக போராடி வருகிறார் அந்த மாணவன்.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement