Read in English हिंदी में पढ़ें
This Article is From Nov 13, 2019

Video:  உ.பி யில் காந்தி ஆசிரமத்தில் பெண் அலுவலரை தாக்கிய மாணவர்கள்

ஆசிரமத்தின் ஊழியர்கள் அப்பெண்ணை ஏன் அடிக்க விரும்பினார்கள், மேலாளர் ஏன் மாணவர்களைத் தூண்டிவிடுகிறார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை

Advertisement
நகரங்கள் Edited by

பெண் நல அலுவலரை ஆசிரம நிர்வாகத்தின் பேரில் மாணவர்கள் குழு அடித்து உதைத்துள்ளனர்.

Raebareli:

உத்தர பிரதேசத்தின் ரெபரேலி மாவட்டத்தில் உள்ள காந்தி சேவை நிகேதன் ஆசிரமத்தில் பெண் நல அலுவலரை ஆசிரம நிர்வாகத்தின் பேரில் மாணவர்கள் குழு அடித்து உதைத்துள்ளனர். 

“நான் காந்தி சேவை நிகேதன் ஆசிரமத்தில் பணிபுரிகிறேன். அந்த நிறுவனத்தின் மேலாளார் மாணவர்களை தூண்டி விட்டு என்னை அடிக்க வைத்தார். மாணவர்கள் என்னை நாற்காலியினால் தாக்கினார்கள். மாஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்க வந்துள்ளதாக” மம்தா துபே தெரிவித்தார். 

நடந்த முழு சம்பவமும் ஆசிரமத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஆசிரமத்தின் ஊழியர்கள் அப்பெண்ணை ஏன் அடிக்க விரும்பினார்கள், மேலாளர் ஏன் மாணவர்களைத் தூண்டிவிடுகிறார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை

Advertisement

Advertisement

“ஆசிரமத்தி நிர்வாகம் இப்போது சிறிது காலமாக என்னைத் தொந்தரவு செய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் கழிப்பறையில் உள்ளே இருந்தபோது கதவை பூட்டி வைத்தனர்” என்று மம்தா தெரிவித்தார். 

இது குறித்து அதிகாரிகளிடம் பேசியபோது மாணவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்  என்று தெரிவித்தார். அந்த சம்பவம் நடந்து முடிந்த இரண்டு நாளுக்கு பின்னர் மாணவர்கள் தாக்கியதாக தெரிவித்தார்

Advertisement