This Article is From Aug 23, 2018

வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்து, கூரையில் ஏறி தப்பித்த மாணவர்கள் - வீடியோ

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், மாணவர்களை மீட்க உதவி செய்வது வீடியோவில் பதிவாகியுள்ளது

Dausa, Rajasthan:

கேரளாவில் மழை ஓய்ந்த நிலையில், ராஜஸ்தானில் கன மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் தாஸா மாவட்டத்தில், தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

அப்படி ஒரு சுரங்கப்பாதைக்குள், பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது. மாணவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள, பேருந்தின் மேற்கூரையில் ஏறி உதவி கோரினர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், மாணவர்களை மீட்க உதவி செய்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ இங்கே.

 

மாநிலத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. பல கிராமங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

.