বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 27, 2020

மாஸ்க் அணிந்து பள்ளிக்கு திரும்பிய சீன குழந்தைகள்! வைரலாகும் ஃபோட்டோஸ்!!

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் தலைநகர் ஹோங்சூவில்தான் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு சமூக விலகலை கடைபிடிப்பதற்காக குழந்தைகள் தலையில், எடையில்லா அட்டையை அணிந்துள்ளனர். இது 3 அடி நீளம் உள்ளது.

Advertisement
விசித்திரம் Edited by

ஒரு சிறுமி பலூனை தலையில் அணிந்து சமூக விலகலை கடைபிடிக்கிறார். இந்தக் காட்சி மிக அழகாக உள்ளது.

Highlights

  • கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட சீனாவில் இயல்பு நிலை திரும்புகிறது
  • மாஸ்க்குகள் அணிந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர்
  • சீன குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

.

கொரோனா பிரச்னை துவங்கிய சீனாவில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாஸ்க்குகள் அணிந்தும், சமூக விலகலை கடைபிடித்தும் பச்சிளம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. மற்ற நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்ற உத்வேகத்தை அளிப்பதாக புகைப்படங்கள் உள்ளதென்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் தலைநகர் ஹோங்சூவில்தான் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு சமூக விலகலை கடைபிடிப்பதற்காக குழந்தைகள் தலையில், எடையில்லா அட்டையை அணிந்துள்ளனர். இது 3 அடி நீளம் உள்ளது. 

பள்ளிகளில் டெஸ்க்குகள் இடைவெளி விட்டே அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் அனைவரும் மாஸ்க் அணிந்து காணப்படுகின்றனர். பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களிடம் சமூக விலகலைக் கடைபிடிக்குமாறு வலியுறுத்துகின்றனர். 
 

இந்த புகைப்பட காட்சிகளை டியூக் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் எய்லீன் செங்யின் சோவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்தப் பதிவு மிக குறுகிய நேரத்தில் 6 ஆயிரம் லைக்குகளையும், 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரீ-ட்வீட்டுகளையும் பெற்றுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டுள்ள சீனாவையும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளையும் பாராட்டி நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

இந்தியாவில் கொரோனா பிரச்னைகள் முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும்போதும், இதுபோன்ற சமூக விலகலை மாணவர்கள் கடைபிடிப்பது அவசியம் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement