This Article is From Nov 20, 2019

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் கற்பிக்கும் முஸ்லிம் பேராசிரியர் : வலுக்கும் எதிர்ப்பு

பேராசிரியர் ஃபுரோஸ் கானின் தந்தையும் சமஸ்கிருதம் பயின்றவர். தன் வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று பஜனையும் பாடுவார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது.

சமஸ்கிருதம் கற்பிக்கும் முஸ்லிம் பேராசிரியர் ஃபுரோஸ் கான்

ஹைலைட்ஸ்

  • ஃபுரோஸ்கானின் நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் -மாணவர்கள் போராட்டம்
  • பஜனை பாடியும், யாகம் செய்தும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்
  • பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியருக்கு உறுதுணையாக உள்ளது
Varanasi:

புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பாடத்துறைக்கு ஃபுரோஸ் கான் என்ற முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த பேராசிரியரை நியமனம் செய்துள்ளனர். இதனால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. 

பேராசிரியன் ஃபுரோஸ்கானின் நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் புதிய ஆட்சேர்ப்பு நடத்தபட வேண்டுமென 12 நாட்களாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமஸ்கிருத இலக்கிய மாணவர்கள் 30 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஊடகங்கள் எங்கள் கோரிக்கைகளை சிதைக்கின்றன. நாங்கள் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக போராடவில்லை. ஆனால் பாரம்பரியப்படி விஷயங்கள் நடக்கவில்லை என்பதற்காக போராடுகிறோம் என்று போராட்டக்காரர்களில் ஒருவரான கிருஷன் குமார் கூறினார். 

கல்லூரி நிர்வாகமோ பேராசிரியர் ஃபுரோஸ் கானுக்கு உறுதுணையாக உள்ளது.  கல்லூரி நிர்வாகம் இந்த துறைக்கு தகுதியானவர் என்றும் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகம்  யுஜிசி விதிகளின் படி செயல்படுகிறது. அதன்படியே பேராசிரியர் நியமனமும் செய்யப்பட்டுள்ளது என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பேராசிரியர் ஃபுரோஸ் கானின் தந்தையும் சமஸ்கிருதம் பயின்றவர். தன் வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று பஜனையும் பாடுவார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது. 

.