This Article is From Dec 03, 2018

‘தமிழிசை எனக்கு யோசனை சொல்ல வேண்டாம்!’- திருநாவுக்கரசர் கடுப்பு

மேகதாது பிரச்னை குறித்து தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்

Advertisement
தெற்கு Posted by

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா வெகு நாட்களாக முயன்று வருகிறது. இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், திட்டத்துக்கான விரிவான ஆய்வறிக்கையைத் தயாரிக்க கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் இந்தப் பிரச்னை குறித்து தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து சில நாட்களுக்கு முன்னர் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், ‘கர்நாடகாவில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் நடைபெறுகிறது. இந்நிலையில், மேகதாது விஷயம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசி தீர்த்து வைக்கக், கூடாதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு திருநாவுக்கரசர், ‘பாஜக மத்திய அரசு, மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடக அரசுக்கு ஏன் அனுமதி கொடுத்தது என்று தமிழிசை முதலில் விளக்கம் கொடுக்கட்டும். பிரதமர் மோடி, முதலில் மேகதாது விவகாரத்தில் கொடுத்திருக்கும் அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கட்டும். அப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்க தமிழிசை அழுத்தம் கொடுக்கட்டும். அதன் பிறகு எனக்கு யோசனை சொல்லலாம்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
Advertisement