தமிழகத்தில் திமுக தலைமை வகிக்கும் ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’-யின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிப்பட்டிருப்பவர் சிபிஐ(எம்)-ஐச் சேர்ந்த எழுத்தாளர் சு.வெங்கடேசன்.
தமிழகத்தில் திமுக தலைமை வகிக்கும் ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி'-யின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிப்பட்டிருப்பவர் சிபிஐ(எம்)-ஐச் சேர்ந்த எழுத்தாளர் சு.வெங்கடேசன். தொடர்ந்து அவர் பல்வேறு வித்தியாசமான முறைகளில் பிரசாரம் செய்து வருகிறார்.
அப்படி அவர் மதுரையில் இருக்கும் பூங்கா ஒன்றில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, பொது மக்களிடம் பேசி வாக்கு சேகரித்து வந்தார். அந்த நேரத்தில், அதிமுக-வின் மூத்த நிர்வாகியும் தமிழக அமைச்சருமான செல்லூர் ராஜூவும் பூங்காவிற்கு வந்தார்.
இதைப் பார்த்த வெங்கடேசன், செல்லூர் ராஜூவுக்கு கும்பிடு போட்டு வரவேற்றார். தொடர்ந்து அவரிடமும், தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். தற்செயலாக நடந்த இந்த சம்பவம் குறித்து வெளியாகியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் சிலர், ‘சு.வெங்கடேசனுக்கு ஸ்லீப்பர் செல் ஆக செயல்பட்டு வந்துள்ளார் செல்லூர் ராஜூ' என்றும் சிலர் கேலி செய்யும் விதத்தில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வெங்கடேசன், ‘காவல் கோட்டம்' மற்றும் ‘வீரயுக நாயகன் வேள்பாரி' உள்ளிட்ட நூல்களை எழுதி பிரபலமடைந்தவர். த.மு.எ.க.ச-வின் முக்கிய பொறுப்பாளராகவும் அவர் இருந்து வருகிறார்.