பிரசன்னா கொடுத்த பதிலடியைச் சுட்டிக்காட்டி திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் கேலி செய்துள்ளார்.
பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, இரு நாட்களுக்கு முன்னர் திமுவின் தமிழன் பிரசன்னாவின் மொபைல் எண்ணை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு பிரசன்னா கொடுத்த பதிலடியைச் சுட்டிக்காட்டி திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் கேலி செய்துள்ளார்.
கடந்த மே 13 ஆம் தேதி, எச்.ராஜா, தன் ஃபேஸ்புக் பக்கத்தில், “யாரோ தமிழன் பிரசன்னாவாம். மாண்புமிகு பிரதமர் அவர்களை அடிக்கடி இழிவாக பேசும் பழக்கம் உள்ள நபர் என்று கேள்வி. 9566111414 அவரது நம்பர் என்கிறார்கள்” என்று பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதற்கு பிரசன்னா, “எனக்குப் புதிதாக வேலை செய்ய பாஜக-வின் தேசியச் செயலாளர் என்று சொல்லிக் கொள்ளும் திரு.எச்.ராஜா அவர்களை புதிய PROவாக நியமித்து இருக்கின்றேன். அதனால் மக்கள் என்னிடத்தில் பேச அவர் எனது தொலைப்பேசி எண்ணை அவரின் முநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாஜகவில் இருக்கும் எனது தீவிர ரசிகர்கள் தொடர்ந்து எனது தொலைப்பேசிக்கு அழைப்பு விடுக்கின்றனர். ‘ஒன்றிணைவோம் வா' நிகழ்ச்சியில் நான் மக்கள் பணியாற்றுவதால் எனக்கு வரும் அழைப்புகளை என்னுடைய புதிய PRO எச்.ராஜா அவர்கள் எடுத்துப் பேசுவார். அதக்றாக எனது அழைப்புகளை நான் அவரின் எண்ணுக்கு ‘Call Forward' செய்துள்ளேன். நன்றாக அழைத்துப் பேசுங்கள். நிறைய அழைப்பு கொடுக்குமாறு நான் பாஜக, ஆர்எஸ்எஸ் சங்கிகளை கேட்டுக் கொள்கின்றேன்,” என பதிலடி கொடுத்தார்.
பிரசன்னா இட்டப் பதிவை ரீ-ட்வீட் செய்த சுப.வீ, “தன்வினை தன்னைச் சுடும்,” என்று கருத்திட்டு எச்.ராஜாவை டேக் செய்துள்ளார்.