This Article is From Oct 01, 2018

ஆதார் விவகாரம்: தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் நோட்டீஸ்

மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை நிறுத்துவது தொடர்பாக தொலை தொடர்பு நிறுவனங்களிடம் ஆதார் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது

ஆதார் விவகாரம்: தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் நோட்டீஸ்

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை - உச்ச நீதிமன்றம்

New Delhi:

ஆதார் அடையாள எண் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்ககோரியும், நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளில் ஆதார் செல்லும் என உச்சநீதிம்னறம் தீர்ப்பு வழங்கியது. மேலும், வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கோருவது சட்டத்துக்கு புறம்பானது என்றும் தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில், மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை நிறுத்துவது தொடர்பாக தொலை தொடர்பு நிறுவனங்களிடம் ஆதார் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது

இதில், அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் ஆதார் எண் இணைப்பதை நிறுத்துவதற்கு தேவையான மாற்று பணிகளை குறித்து விளக்குமாறு ஏர்டெல், ஜியோ, வோடாஃபோன், ஐடியா உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

.