ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ந்தவர் சுப்ரமணிய சுவாமி.
ஹைலைட்ஸ்
- ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ந்தவர் சு.சுவாமி
- சுப்ரமணிய சுவாமி ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார்
- சுப்ரமணிய சுவாமியின் கமென்ட் வைரலாகி வருகிறது
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து சுப்ரமணிய சுவாமி அடித்துள்ள கமென்ட், ஸ்க்ரீன் ஷாட் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் ராகவ் பரத் என்பவர், சுப்ரமணிய சுவாமி மன்மோகன் சிங்குடன் இருக்கும் பழைய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, சுப்ரமணிய சுவாமியின் ஐடியை டேக் செய்திருந்தார்.
இந்த போட்டோவுக்கு கமென்ட் அடித்த சுப்ரமணிய சுவாமி, இந்த போட்டோ 1991-ல் எடுக்கப்பட்டது என்று பதில் அளித்தார்.
அடுத்ததாக அபிஷேக் மிஷ்ரா என்பவர், ‘'உங்க தலைமுடி இப்போது இருப்பதை விட 1991-ல் ரொம்ப வெள்ளையாக இருக்கிறது. என்ன காரணம்?'' என்று கமென்ட்டில் கேட்டார்.
இதற்கு பதில் அளித்த சுப்ரமணிய சுவாமி ‘ஜெயலலிதாவின் டெர்ரர் எஃபெக்ட்' என்று கூறியுள்ளார். 1990-களில் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ந்தவர் சுப்ரமணிய சுவாமி. அவர் அடித்திருக்கும் கமென்ட் மூலம் ஜெயலலிதாவுக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகள் அவரது தலைமுடியை நரைக்கச் செய்யும் அளவுக்கு இருந்தது என்று பொருள் கொள்ளலாம்.
சுப்ரமணியசுவாமியின் கமென்ட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டு வைரலாகி வருகிறது