Chennai Rains - "கடலூர் முதல் நாகப்பட்டினம் வரை பல இடங்களில் கனமழை பெய்துள்ளது"
Chennai Rains - வடகிழக்குப் பருவமழைக் காலம் நிலவிவரும் நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. நகரின் பல இடங்களில் திடீர் திடீர் என்றும் அதிக மழைப் பொழிவுக் காணப்படுகிறது. இது குறித்துப் பிரபல வானிலை வல்லுநர், தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
“ஈஸ்டர்லி காற்று மூலம் இதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும். கடலூர் முதல் நாகப்பட்டினம் வரை பல இடங்களில் கனமழை பெய்துள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்துள்ளது. கடலூர்தான் இந்த ஆண்டு மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருந்துள்ளது. அங்கு இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது.
இன்று மதியம் வரை சென்னையின் சில இடங்களில் திடீர் மழைப் பொழிவு குறைந்த நேரத்திற்குப் பெய்யும். அப்புறம் மழை எதுவும் இருக்காது. இத்தோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை வட்டம், வரும் 16 ஆம் தேதிதான் மீண்டும் மழையை எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் மேற்கு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது,” என்று தகவல் தெரிவித்துள்ளார்.