This Article is From Dec 31, 2019

குறையொன்றும் இல்லை: பெரு மூளைவாத நோயினால் பாதிக்கப்பட்ட நபர் நீதிபதியாக பதவியேற்கிறார்

புனேவைச் சேர்ந்த பிரசாத் பாஜி நீதித்துறை மாஜிஸ்திரேட் சிவில் நீதிபதி ஜூனியர் பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

குறையொன்றும் இல்லை: பெரு மூளைவாத நோயினால் பாதிக்கப்பட்ட நபர் நீதிபதியாக பதவியேற்கிறார்

வாழ்க்கையில் யாரும் தனக்கு இருக்கும் குறையை குறைவாக உணரக்கூடாது என்று கூறினார்.

Pune:

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜூனியர் பிரிவில் சிவில் நீதிபதியாக பெறுப்பேற்கவுள்ள நீதிபதி பெருமூளைவாத நோயினால் பாதிக்கப்பட்டவர். 

புனேவைச் சேர்ந்த பிரசாத் பாஜி நீதித்துறை மாஜிஸ்திரேட் சிவில் நீதிபதி ஜூனியர் பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையுடன் பேசி பிரசாத் “ நான் எப்போதும் எனக்கு இருப்பதை ஏற்றுக் கொண்டேன். சிறுவயதில் கூட குழந்தைகள் கிரிக்கெட் விளையாடும் போது நானும் விளையாடுவதைப் போல உணர்ந்தேன். ஆனால் எனது இயலாமை காரணமாக என்னால் முடியவில்லை. எனவே, நான் நீதிபதியாக மாற முடிவு செய்தேன். என்னால் கிரிக்கெட் விளையாட முடியாவிட்டால் நான் ஒரு நல்ல நடுவராக முடியும் என்று முடிவு செய்தேன்.” என்று தெரிவித்தார்.

“நான் ஆரம்பத்தில் இருந்தே அரசியல் அறிவியல் பாடத்தை விரும்பினேன். ஆகவே நான் சட்டப் பயிற்சி பெற நினைத்தேன். நீதிமன்றத்தின் செயல்பாட்டை புரிந்து கொள்ள நீதிமன்றத்தில் பயிற்சி செய்தேன்” என்று கூறினார்.

பெருமூளை வாதம் கொண்ட புகழ்பெற்ற இயற்பியாலளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் உதாரணத்தை மேற்கோள் காட்டி வாழ்க்கையில் யாரும் தனக்கு இருக்கும் குறையை குறைவாக உணரக்கூடாது என்று கூறினார்.

.