Read in English
This Article is From Apr 03, 2019

கோடையில் உடற்சூட்டை தணித்து குளிர்ச்சியைக் கொடுக்கும் பானம் இதுதான்...!

கோடைகாலத்தின் வெயிலின் தாக்கத்தால் உடற்சூடும் அதிகரிக்கும். இந்த உடற்சூட்டை குறைக்க மோர் மிகவும் உதவுகிறது

Advertisement
Health

மோர் இந்தியர்களின் விருப்பமான பானமாகும்.

Highlights

  • மோரில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு
  • உடற்சூட்டைத் தணிக்க உதவுகிறது
  • மோரில் கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ளது

இந்தியாவின் கோடை காலத்தில் எங்கும் கிடைக்கக்கூடிய மக்களின் தாகத்தை தணிக்கக்கூடிய எளிய பானம் என்றால் அது மோர்தான். உப்பு, கடுகு, சீரகம், மிளகு, கருவேப்பிலை, புதினா ஆகியவற்றைப் போட்டு தாளித்து கொடுக்கப்படும் மோர் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. மோரில் உள்ள ஊட்டச்சத்துப் பலன்களை ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்கோத்ரா நம்மிடம் பகிர்கிறார். "உடலுக்கு நீர்ச்சத்தை அதிகரிக்கக்கூடியது. உடலுக்கு குளிர்ச்சியையும் செரிமானத்தையும் அதிகரிக்கச் செய்யும் தன்மை இதில் உள்ளது. அசிட்டிட்டி மற்றும் வயிறு உப்பலைக் குறைக்கிறது. லாக்டேஸ் அலர்ஜி உள்ளவர்களும் மோரினை குடிக்கலாம். இதில் உள்ள நுண் ஊட்டச்சத்துகள் உடல் எடை குறையவும், எலும்பின் உறுதித் தன்மையை அதிகரிக்கவும் வெகுவாக உதவுகிறது. மோரில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மோரின் நன்மைகள்

1. ஊட்டச்சத்து நிறைந்தது

Advertisement


மோரில் உள்ள ஊட்டசத்துகள் மற்றும் விட்டமின்கள் உடலின் வளர்ச்சிக்கு மிக தேவையான ஒன்றாகும். இதில் கால்சியம், புரதச்சத்து மற்றும் பாஸ்பரஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், சோடியம் மற்றும் சின்க் இதனுடன் விட்டமின் ஏ, டி, இ மற்றும் பி உள்ளது.


2. உடற்சூட்டைத் தணிக்கிறது

Advertisement


கோடைகாலத்தின் வெயிலின் தாக்கத்தால் உடற்சூடும் அதிகரிக்கும். இந்த உடற்சூட்டை குறைக்க மோர் மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடல் எடை குறைக்க உதவுகிறது. காரமான உணவுகளினால் ஏற்படும் விளைவுகளையும் குறைக்கிறது.

3. செரிமானத்திற்கு ஏற்றது

Advertisement


செரிமானக் கோளாறுகளால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மோர் குடிப்பது மிகவும் அவசியம். மோரில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியா  உணவுக் குழாயை சுத்தம் செய்கிறது. மோரினை லாக்டோச் அலர்ஜி உள்ளவர்களும் அருந்தலாம். உணவுக் குடல் கேன்சரையும் தவிர்க்கிறது. காரமான உணவுகள் மற்றும் செரிமானத்திற்கு சிரமமான உணவினை செரிமானம் செய்ய மிகவும் உதவுகிறது.

4. கால்சியம்  நிறைந்தது

Advertisement


கால்சியம் எலும்பின் உறுதிக்கு மிகவும் தேவையான ஒன்று,மோரில் கால்சியம் அதிகமுள்ளது. உடலின் இரத்த அழுத்தத்தை குறைக்க வெகுவாக உதவுகிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களுடைய டயட்டில் நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. உடல் எடைக் குறைக்க


உடல் எடை மீது தீவிர கவனத்தை செலுத்தக்கூடியவர்கள் நிச்சயமாக மோரினை டயட்டின் ஒரு பகுதியாக வைத்திருக்க வேண்டும். குறைந்த கொழுப்பும்  அதே நேரத்தில் அதிக ஊட்டச்சத்து உள்ள பானம் என்றால் அது மோராகத்தான் இருக்கும். பசியைத் தணித்து ஆரோக்கியமற்ற ஜங்க் புட்களை தவிர்க்க உதவுகிறது.

Advertisement

(Pooja Malhotra is a nutritionist based in Delhi)

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

Advertisement