This Article is From Aug 04, 2018

இரண்டாவது முறை விண்வெளிப் பயணம் - தேர்வானார் சுனிதா வில்லியம்ஸ்

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த விண்கல திட்டத்துக்குப் பின்னர் அமெரிக்க மண்ணிலிருந்து மனிதர்கள் இயக்கக்கூடிய விண்கல திட்டம் இதுவாகும்

இரண்டாவது முறை விண்வெளிப் பயணம் - தேர்வானார் சுனிதா வில்லியம்ஸ்
Houston:

நாசாவின் முதல் மனித விண்வெளி விமானப் பயணத்துக்கான ஒன்பது பேர் கொண்ட குழுவில் அமெரிக்கவாழ் இந்தியரான சுனிதா வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு விண்வெளி ஓடம் தன் பணியில் ஓய்வு பெற்ற பின்னர் தயாரான திட்டமாகும். பல ஆண்டுகளாகத் தயாராகி வரும் விண்கலம் மற்றும் விண்வெளி ஓடம் திட்டத்துக்கான குழுவினரைத் தற்போது நாசா தேர்ந்தெடுத்து உள்ளது.

‘தி போயிங் கம்பெனி’ மூலம் நிர்வகிக்கப்பட உள்ள இப்புதிய வணிக ரீதியிலான விண்கலத்தின் முதல் சோதனை ஓட்டத்தை ஒன்பது பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் தொடங்கிவைப்பார்கள் என விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.

2019ம் ஆண்டு தொடங்க உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பயணத்தை போயிங் சிஎஸ்டி- 100 ஸ்டார்லினர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ட்ராகன்கேப்ஸ்யூல்ஸ் கலங்களில் எட்டு நாசா வீரர்கள் அற்றும் ஒரு முன்னாள் நாசா வீரர் உள்ளிட்ட ஒன்பது பேர் பயணிக்க உள்ளனர்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த விண்கல திட்டத்துக்குப் பின்னர் அமெரிக்க மண்ணிலிருந்து மனிதர்கள் இயக்கக்கூடிய விண்கல திட்டம் இதுவாகும்.

பயிற்சி ஓட்டத்துக்கான குழுவை அறிவித்த நாசா, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஸ்டார்லினர் மற்றும் ட்ராகன் மூலம் பயணம் செய்யவுள்ள நான்கு விண்வெளி வீரர்களையும் இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளது. நாசாவிலிருக்கும் சோதனைக் கூடத்திலிருந்து விண்வெளிக்கு சென்று பின் திரும்பி வரும் இரண்டு கலங்களையும் நாசாவின் துணையோடு தான் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

முதல் ஸ்டார்லினர் குழுவில் ஜான் கசாடா (45) மற்றும் சுனிதா வில்லியம்ஸ் (52) ஆகியோர் பயணம் செய்கின்றனர். விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதற்கு முன்னதாக இரண்டு முறை தங்கியிருந்து கடந்த 2012-ம் ஆண்டு பூமி திரும்பியவர் சுனிதா வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குழுவினர் ஹவுஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி நிலையத்தில் நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் பிரைடன்ஸ்டைன் முன்னிலையிலான விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

நாசா வீரர்கள் ராபர்ட் பென்கென் (48) மற்றும் டக்லஸ் ஹர்லி (51) ஆகிய இருவரும் முதல் ட்ராகன் கலத்தில் இணைந்து பயணிக்க உள்ளனர். அடுத்தடுத்ததாக நாசா விண்வெளி வீரர்களான எரிக் போ (53) மற்றும் நிகோல் மான் (41), கிரிஸ்டோபர் ஃபெர்குசன் (56) ஆகியோர் இணைந்து பயணிக்க உள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் நான்கு பேர் அளவில் பணியாற்ற முடியும் என்ற நிலை தற்போது வளர்ந்து ஏழு பேர் வரையில் பணியாற்றும் அளவுக்கு இடவசதி முதல்கொண்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

.