বাংলায় পড়ুন Read in English
This Article is From Oct 29, 2019

துபாய் நீச்சல் குளத்தில் Sunny Leone! புதிய படங்களால் ரசிகர்கள் உற்சாகம்!!

தீபாவளியன்று சன்னி லியோன் வெளியிட்ட இன்ஸ்டா புகைப்படங்களை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். தற்போது அவர் விடுமுறையை துபாயில் கழித்து வருகிறார்.

Advertisement
இந்தியா Posted by

இன்ஸ்டாகிராமில் சன்னியை இரண்டரை கோடிக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர்.

New Delhi:

பிரபல நடிகை சன்னி லியோன் துபாயில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார். நீச்சல் குளத்தில் பிகினி உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் அதிகளவு ஷேர் செய்கின்றனர். 

இன்ஸ்டாகிராமில் அதிகம் ஃபாலோ செய்யப்படும் நடிகைகளில் சன்னி லியோனும் ஒருவர். முன்பு ஆபாச படங்களில் நடித்த சன்னி, தற்போது அதிலிருந்து திரும்பி பாலிவுட்டில் நடித்து வருகிறார். இதனால் தற்போது அவரது ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. 
 

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் மட்டும் சன்னியை 2.77 கோடிக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர். அவரது விருப்பமான இடங்களில் துபாயும் ஒன்று. தற்போது சன்னி தனது கணவர் டேனியல் வெபருடன் துபாயில் விடுமுறை நாட்களை கழித்து வருகிறார். அங்குள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் சன்னி உற்சாக குளியல் போட, அதனை கணவர் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 

Advertisement

சன்னியும் அவரது கணவர் டேனியல் வெபரும் நிஷா என்ற குழந்தையை தத்தெடுத்துள்ளனர். சமீபத்தில் நிஷாவின் பிறந்த நாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது. தற்போது தீபாவளியன்று குடும்பத்துடன் சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. 
:

Advertisement

இந்திய பொழுதுபோக்கு துறையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகத்தான் சன்னி லியோன் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் ஹேட் ஸ்டோரி 2, ராகினி எம்எம்எஸ் 2, ஜிஸ்ம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் சன்னி. நவாசுதீன் சித்தீக்குடன் அவர் நடித்திற்கும் 'மோட்டிச்சூர் சக்னாச்சூர்' என்ற திரைப்படம் நவம்பர் 15-ம்தேதி திரைக்கு வருகிறது. 

Advertisement