This Article is From Jan 21, 2019

சந்திர கிரகண நாளில் அமெரிக்காவில் என்னென்ன நடக்கலாம் தெரியுமா....?

Lunar Eclipse in January 2019: இதனால் பனியோ அல்லது வானம் மேக மூட்டத்துடனோ இருக்கப்போவதில்லை. மாறாக மிகவும் குளிர் மட்டும் மிகவும் அதிகமாக இருக்கும் இந்தச் சூழலில் வெளியிடங்களில் இருப்பது ஆபத்தாக மாறாலாம்

சந்திர கிரகண நாளில் அமெரிக்காவில் என்னென்ன நடக்கலாம் தெரியுமா....?

Lunar Eclipse in January 2019: இதே போன்ற சந்திர கிரகணத்தை பார்க்க வேண்டுமென்றால் அமெரிக்கர்கள் 2022 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். 

NEW YORK/LOS ANGELES:

ஞாயிறன்று ஏற்படும் சந்திர கிரகணத்தினால் அமெரிக்காவின் மத்திய மற்றும் வடகிழக்கு மாகாணத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஸ்டார் கேஸர்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் நியூயார்க் வரை பூங்காக்களிலிருந்து சூரிய கிரகணத்தை முழுமையாக படம்பிடிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த சந்திர கிரகணத்தில்  நிலா சிவப்பாக மாறும். இதை இரவு 11.41 முதல் பார்க்கலாம். இதை AstronomersWithoutBorders.org என்ற இணையதளம் ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பை செய்யவிருக்கிறது. பெனிசில்வேனியாவின் கார்பன் கவுண்டி சுற்றுச்சூழல் மையம் “இது பனியோ அல்லது வானம் மேக மூட்டத்துடனோ இருக்கப்போவதில்லை. மாறாக மிகவும் குளிர் மட்டும் மிகவும் அதிகமாக இருக்கும் இந்தச் சூழலில் வெளியிடங்களில் இருப்பது ஆபத்தாக மாறாலாம்” என அறிவித்துள்ளது.

இந்த சந்திர கிரகணத்தில் நிலா காப்பர் நிற சிவப்புடன் காணப்படும். இதை ப்ளட் மூன் (blood moon) இரத்த நிலா என்று அழைக்கின்றனர். சந்திரன் சூரியனுக்கு நெருக்கமாகச் செல்வதால் இந்நிகழ்வு ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெற்று கண்களிலே பார்க்கலாம்.

இதே போன்ற சந்திர கிரகணத்தை பார்க்க வேண்டுமென்றால் அமெரிக்கர்கள் 2022 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

ஒரு மணிநேரம் முழுமையாக இந்த சூரிய கிரகணத்தை வடக்கு மற்று தென் அமெரிக்காவில் பார்க்க முடியும். இந்த கிரகணத்தை மேற்கு அரைக்கோளத்தில் உள்ள ஐரோப்பா, மேற்கு அமெரிக்கா, வடக்கு ரஷ்யாவிலும் இதைப் பார்க்கலாம்.

.