This Article is From Jun 25, 2019

’கடந்த 5 ஆண்டுகளாக சூப்பர் எமர்ஜென்சியில் இந்தியா’ மோடி மீது மம்தா தாக்கு!

பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த 5 கால ஆட்சியை ’சூப்பர் எமர்ஜென்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

’கடந்த 5 ஆண்டுகளாக சூப்பர் எமர்ஜென்சியில் இந்தியா’ மோடி மீது மம்தா தாக்கு!

மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியை ’சூப்பர் எமர்ஜென்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Kolkata:

பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது 5 ஆண்டுகால ஆட்சியை ‘அவசர நிலை' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நாட்டில் அவசரநிலை கொண்டுவரப்பட்டது. 1977ஆம் ஆண்டு வரை அவசர நிலை நடைமுறையில் இருந்தது. இந்த 21 மாதங்களில் நாட்டில் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டு மக்களின் குடி உரிமைகள் ரத்து செய்யப்பட்டன.

1975ல் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்ட இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகின்றன. இதனை நினைவுப்படுத்தும் வகையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, கடந்த 5 ஆண்டுகளாக 'சூப்பர் எமர்ஜென்சி' அமல்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க போராட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பாஜகவுக்கும், மம்தாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், கடந்த மே.20ல் நடந்த பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியிலும், அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் நிதிஆயோக் கூட்டத்திலும் மம்தா பங்கேற்கவில்லை.

முன்னதாக, கடந்த மாதம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவில், மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில், 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. கடந்த 2014 நடந்த மக்களவை தேர்தலில் பாஜக 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்குவங்கத்தையும் குஜராத்தாக மாற்ற நினைக்கிறது. நாட்டின் கலாச்சாரத்தை காப்பதற்கு ஒன்றுக்கூட வலியுறுத்துகிறது. மதத்தை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கிறது என்றும் அவர் கடுமையாக விமர்சித்ததுள்ளார்.

இதனிடையே, அவசர நிலையை நினைவுபடுத்தி பிரதமர் மோடி தனது ட்விட்டரில், நாட்டில் அவசர நிலையை தீவரமாகவும், அச்சமின்றியும் எதிர்த்த மிகப்பெரியவர்களை இந்தியா வணங்குகிறது. எதேச்சதிகார மனநிலை படைத்தவர்களிடம இருந்து விடுபட்டு, இந்தியா ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

With inputs from ANI

.