This Article is From Jan 25, 2020

“சூப்பர்… அடுத்த ஜோக் சொல்லு தம்பி…”- சீமானை சீண்டிய எஸ்.வி.சேகர்!!

“தம்பி படத்துல மாதவன் வில்லனைப் பார்த்து ஒரு வசனம் வரும். நீ எந்தப் பக்கம் போனாலும் நான் அங்க வந்து நிப்பேன்னு..."

Advertisement
தமிழ்நாடு Posted by

"...கொடுக்கப் போற மரண அடில ரஜினி அதோட கட்சியைக் களைக்கணும்"

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி பேசியதற்கு, நடிகர் எஸ்.வி.சேகர் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

முன்னதாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான், “தம்பி திரைப்படத்தில் நான் ஒரு வசனம் வைத்திருப்பேன். கதாநாயகன், வில்லனைப் பார்த்து ‘நீ எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்க நான் வந்து நிப்பேன்' என்பார். அதைப் போல ரஜினி, எந்தப் பக்கம் திரும்பினாலும் நான் அங்கு நிற்பேன்,” என்று அதிரடியாக பேசினார்.

இதைச் சுட்டிக்காட்டி நாம் தமிழர் நிர்வாகியான பிரபாகரன் காமராஜ் என்பவர், “தம்பி படத்துல மாதவன் வில்லனைப் பார்த்து ஒரு வசனம் வரும். நீ எந்தப் பக்கம் போனாலும் நான் அங்க வந்து நிப்பேன்னு. அதுமாதிரி ரஜினி, 234 தொகுதியிலும் நிக்கணும். அவர் வேட்பாளர்கள் திரும்பிய பக்கம்லாம் நாம் தமிழர் கட்சி சிம்ம சொப்பணமா நிக்கனும். கொடுக்கப் போற மரண அடில ரஜினி அதோட கட்சியைக் களைக்கணும்,” என்று ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார். 

Advertisement

அதை ரீ-ட்வீட் செய்த நடிகர் எஸ்.வி.சேகர், “சூப்பர். அடுத்த ஜோக் சொல்லு தம்பி. அதுக்காவது சிரிப்பு வருதான்னு பாப்போம்” என்று கேலியாக பதிவிட்டுள்ளார். 
 

Advertisement