This Article is From Jan 15, 2020

“பொய்களை உண்மை போல் எழுதாதீர்கள்!”- பத்திரிகையாளர்களுக்கு Rajini-யின் ‘நச்’ அட்வைஸ்

Rajinikanth speech in Thuglak: "ஊடகங்கள், விமர்சகர்கள் மற்றும் இதழியலாளர்கள் உண்மையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் செய்தியாக்க வேண்டும்."

“பொய்களை உண்மை போல் எழுதாதீர்கள்!”- பத்திரிகையாளர்களுக்கு Rajini-யின் ‘நச்’ அட்வைஸ்

Rajinikanth speech in Thuglak: "உண்மை செய்தி என்பது பால் போன்றது. பொய் என்பது நீர் போன்றது"

Chennai:

Rajinikanth speech in Thuglak: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஊடகங்கள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஊடக நிறுவனங்கள் உண்மைகளை செய்தியாக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

சென்னையில் நடந்த 'துக்ளக்' இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, நாட்டுக்கு ‘சோ' ராமசாமி போன்ற பத்திரிகையாளர்கள் தேவை என்று பேசினார். 

“காலம், அரசியல் மற்றும் சமூகம் மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. இதைப் போன்ற நேரங்களில், மக்களுக்கு சேவையாற்றுவதில் ஊடகங்களுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது.

ஆனால் சில தொலைக்காட்சி சேனல்கள், சில அரசியல் கட்சிகளுக்குச் சாதகமாக நடந்து கொள்கின்றன. ஊடகங்கள், விமர்சகர்கள் மற்றும் இதழியலாளர்கள் உண்மையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் செய்தியாக்க வேண்டும்.

உண்மை செய்தி என்பது பால் போன்றது. பொய் என்பது நீர் போன்றது. இரண்டையும் சேர்த்தால் எது உண்மை எது பொய் என்பதை மக்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள்.

ஒரு பத்திரிகையாளர், எந்தப் பகுதி பால் எந்தப் பகுதி நீர் என்பதை சொல்ல வேண்டும். உண்மையை எழுதுங்கள். ஒரு பொய்யை உண்மையைப் போல எழுதாதீர்கள்,” என்று தனது சிறப்புரையின் போது அறிவுரை வழங்கினார் ரஜினி. அவரின் பேச்சுக்கு அரங்கில் பரவலான கரகோஷம் எழுந்தது. 

.