This Article is From Dec 06, 2018

‘2.0’ ரூ.500 கோடி வசூல்… சினிமா சாதனைகள் தொடர்ந்து முறியடிப்பு!

2.0, சீக்கரமே 1000 கோடி ரூபாய் கலெக்‌ஷனைப் பெற்றுவிடும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது

‘2.0’ ரூ.500 கோடி வசூல்… சினிமா சாதனைகள் தொடர்ந்து முறியடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த, ‘எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0', கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியாகி, பட்டித் தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்தப் படத்தை ‘லைகா புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார், ஷங்கர் இயக்கியுள்ளார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். ‘இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரிலீஸான முதல் நாளிலிருந்தே, 2.0 வசூலில் சாதனை படைத்து வந்தது. படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் அதிகமாக வரவே, ஒரு வாரம் கழித்தும் உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களுக்கு கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில், 2.0 திரைப்படத்தின் கலெக்‌ஷன் 500 கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாக, லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

2.0, சீக்கிரமே 1000 கோடி ரூபாய் கலெக்‌ஷனைப் பெற்றுவிடும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.

.