Read in English
This Article is From Dec 17, 2019

ரஜினியின் 'தர்பார்' ட்ரெய்லர் வெளியானது! ரசிகர்கள் உற்சாகம்!! 'I am a Bad Cop'

லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இப்படத்லிருந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய ரஜினியின் அறிமுகப் பாடலான ‘சும்மா கிழி' முதல் சிங்கிள் ட்ராக்காக சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Advertisement
Entertainment Written by

குறைந்த நேரத்தில் சில மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது தர்பார் ட்ரெய்லர்

ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகியுள்ளது. யூடியூபில் வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்'. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இப்படத்லிருந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய ரஜினியின் அறிமுகப் பாடலான ‘சும்மா கிழி' முதல் சிங்கிள் ட்ராக்காக சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

2020 பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 9-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என நேற்று லைக்கா புரொடெக்சன்ஸ் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில், யூடியூபில் Lyca Productions-ன் சேனலில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் மும்பை போலீசாக ரஜினி வலம் வருகிறார். மிகக் குறைந்த நேரத்தில் சில மில்லியன் பார்வைகளை கடந்துள்ள இந்த ட்ரெய்லர், முந்தைய ரிக்கார்டுகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
Advertisement