வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார்களுக்கு உடனடியாக கைது செய்யக்கூடாது -உச்ச நீதிமன்றம்
New Delhi: எஸ்.சி, எஸ்.டி பிரிவினரையும் பழங்குடியினரையும் பாதுகாக்கும் சட்டத்தின் கடுமையான விதிகளை நீர்த்து போகச் செய்ததாக கூறப்படும் சர்ச்சைக்குறிய உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரும் மத்திய அரசின் கோரிக்கையை உயர்நீதி மன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார்களுக்கு உடனடியாக கைது செய்யப்படக்கூடாது என்று கூறி 2018 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் மனு மீது கூறியிருந்தது.
எஸ்.சி/எஸ்.டி சட்டத்தினால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறியது உச்ச நீதிமன்றம். ஆனால் நாடெங்கும் இந்த திருத்தத்தை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்தன.
கடந்த ஆண்டு ஏப்ரல் 2 அன்று நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நடத்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் கிட்டத்தட்ட 12 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. “இந்த விவகாரத்தை அடுத்த வாரம் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்” என்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் யூ.யூ. லலித் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்தது.