This Article is From Aug 21, 2020

மும்பையில் உள்ள 3 சமண கோயில்களில் வழிபாடு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!

மகாராஷ்டிரா அரசாங்கம் இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி தொற்றுநோய் காரணமாக பண்டார்பூர் வாரி போன்ற பிற மத விழாக்களை ரத்து செய்துள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • மூன்று சமண கோவில்களில் தற்காலிக பிரார்த்தனையை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • இந்த தளர்வு இரண்டு நாட்களுக்கு மட்டுமே
  • விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு இந்த உத்தரவு பொருந்தாது

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 29 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், வழிப்பாட்டுத் தலங்கள் பெரும் கட்டுப்பாடுகளுடன் சில இடங்களில் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கிய எட்டு நாள் பரியூஷன் திருவிழாவின் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள மூன்று சமண கோவில்களில் தற்காலிக பிரார்த்தனைகளை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இந்த தளர்வு இரண்டு நாட்களுக்கு மட்டுமே என்றும், நிலையான இயக்க நெறிமுறைகள் (SOP), மற்றும் சமூக தொலைவுடன் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க  வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த இடைக்கால உத்தரவை இந்த நேரத்தில் மற்ற வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கான ஒரு முன்னுதாரணமாக பார்க்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

பூஜை காலத்தில் கோயில்களில் பிரார்த்தனை செய்ய அனுமதி கோரி ஸ்ரீ பர்ஷ்வதிலக் ஸ்வேதாம்பர் மூர்த்திபுஜாக் தபகாச் ஜெயின் அறக்கட்டளை முன்னதாக உச்சநீதிமன்றத்தை நாடியது.

மகாராஷ்டிரா அரசாங்கம் இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி தொற்றுநோய் காரணமாக பண்டார்பூர் வாரி போன்ற பிற மத விழாக்களை ரத்து செய்துள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

Advertisement

அதற்கு பதிலளித்த இந்திய தலைமை நீதிபதி “நீங்கள் SOP ஐ அமல்படுத்தி சோதனை அடிப்படையில் ஏன் நிகழ்ச்சிகளை நடத்த கூடாது?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “சமூக தொலைவு பராமரிக்கப்படுவதையும், மக்கள் அதை பின்பற்றுவதையும் உறுதி செய்ய முடிந்தால் விழாக்கள் ரத்து செய்யப்பட வேண்டிய அவசியமில்லை” என்று கூறியிருந்தார்.

Advertisement

இந்நிலையில் அறக்கட்டளை சார்பாக ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் டேவ், “கோயிலுக்கு வரும் பக்தர்கள் SOP ஐ பின்பற்றுவார் என்றும், அனுமதி கோரப்படுவது மும்பையில் உள்ள கோயில்களுக்கு மட்டுமே என்றும் வாதிட்டார்.

Advertisement