Read in English
This Article is From Dec 04, 2018

சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையின் தணிக்கை தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கூடாது என்று ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆஸ்கார் பெர்னாண்ட்ஸ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

Advertisement
இந்தியா

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையின் தணிக்கை தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கூடாது என்று மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

காங்கிரஸ் தலைவர்கள் அஸோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிட்டு முன்கூட்டியே மோசடிகளை சித்தரித்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில் டெல்லி உச்சநீதி மன்றம், நேஷ்னல் ஹெரால்ட் செய்தித்தாள் தொடர்பான 2011-12க்கான வரித்தணிக்கை வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் மீது விசாரணை நடத்த வருமான வரித் துறைக்கு  அனுமதி அளித்துள்ளது.

நீதிமன்றம் இறுதியாக எந்த உத்தரவையும் வழங்காமல், வழக்கு விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. சில காரணங்களுக்காக தற்போது இந்த வழக்கை எடுக்க முடியாது என்று நீதிபதிகள் விளக்கமளித்தனர்.

ஜவஹர்லால் நேருவினால் உருவாக்கப்பட்ட நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையின் தணிக்கை தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கூடாது என்று ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆஸ்கார் பெர்னாண்ட்ஸ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

Advertisement

டெல்லி உயர்நீதி மன்றம் கடந்த மாதம் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பு 2011-12 ஆம் ஆண்டிற்கான ஆவணங்களை குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறையினர்க்கு ஆதரவாக இது அமைந்தது. 

Advertisement